தேடுதல்

Vatican News
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி   (ANSA)

தாய்லாந்து நாட்டில் கர்தினால் பிலோனியின் பயணம்

தாய்லாந்து நாட்டில் கிறிஸ்தவம் அறிமுகமாகி, 350 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாட, கர்தினால் பிலோனி அவர்கள் அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், மே 16 இவ்வ்வியாழன் முதல், மே 21, வருகிற செவ்வாய் முடிய தாய்லாந்து நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் சியாம் (Siam) என்ற பகுதியில் 1669ம் ஆண்டு துவக்கப்பட்ட முயற்சிகள் வழியே, அந்நாட்டில் கிறிஸ்தவம் அறிமுகமாகி, 350 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாட, கர்தினால் பிலோனி அவர்கள் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மே 16, இவ்வியாழன், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் சென்றடைந்த கர்தினால் பிலோனி அவர்கள், இவ்வெள்ளியன்று, அன்னை மரியாவின் விண்ணேற்பு பேராலயத்தில் ஆயர்களுடன் மேற்கொள்ளும் சந்திப்புடன் இப்பயண நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

மே 18, சனிக்கிழமை பாங்காக் அருகே உள்ள சம்பிரானில், 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திருப்பலியை, கர்தினால் பிலோனி அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.

மே 19 ஞாயிறு முதல், 21 செவ்வாய் முடிய தாய்லாந்தின் வடக்கே, சியாங் மாய் மற்றும் போர்த்துகீசிய கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களின் ஒரு சில இனத்தவரை நேரில் சந்திக்கிறார், கர்தினால் பிலோனி. (Fides)

16 May 2019, 15:22