காலநிலை மாற்றத்தை உணர்த்தும் பூமிக்கோள வரைப்படம் காலநிலை மாற்றத்தை உணர்த்தும் பூமிக்கோள வரைப்படம் 

‘ஒரே மனிதக் குடும்பம், நம் பொதுவான இல்லம்’

நாம் அனைவரும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கம் என்ற நம்பிக்கையால் முழுவதும் உந்தப்படுகின்றோம் – கர்தினால் தாக்லே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘ஒரே மனிதக் குடும்பம், நம் பொதுவான இல்லம்’ என்ற தலைப்பில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, மே 23, வருகிற வியாழனன்று, தனது 21வது பொதுப் பேரவையை நடத்தவிருக்கின்றது.

மனித சமுதாயம், முன்னெப்போதும் அனுபவித்திராத துன்பங்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு நாம் எல்லாரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அழைப்புடன் இந்த பொதுப் பேரவை இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே.

புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை, போர்கள், சுற்றுச்சூழல் பேரிடர் போன்றவை அதிகரித்து வருவதைக் குறைப்பதற்கு, நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்ப உறுப்பினர்கள் என்ற உணர்வு, நம்மை செயல்படத் தூண்டுகிறது என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.

நாம் அனைவரும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரே மனிதக் குடும்பத்தின் அங்கம் என்ற நம்பிக்கையால் முழுவதும் உந்தப்படுகின்றோம் என்றும் கர்தினால் கூறினார்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவை ஆரம்பிக்கும் நாளில், மாலை ஐந்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2019, 15:23