அகிம்சையின் பாதைக்கு அடையாளமாக நியூ யார்க் நகரில் அமைந்துள்ள சிலை அகிம்சையின் பாதைக்கு அடையாளமாக நியூ யார்க் நகரில் அமைந்துள்ள சிலை 

வன்முறையற்ற நிலை என்பது, வாழ்வின் பாதை

பிறருக்குக் காட்டவேண்டிய மதிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகப் பலத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறையற்ற வழிகளின் முக்கியத்துவம் இன்று தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், 'Pax Christi' என்ற அனைத்துலக அமைப்பும் இணைந்து, 'அகிம்சையின் பாதை: அமைதிக் கலாச்சாரத்தை நோக்கி' என்ற தலைப்பில், ஏப்ரல் 4,5 ஆகிய இரு நாள்கள், வத்திக்கானில், கருத்தரங்கு ஒன்றை நடத்தின.

மோதல்களும், வன்முறைகளும் பெருகிவரும் இன்றையச் சூழல்களைப் புரிந்துகொள்ளவும், வன்முறைகளின் காரணங்களை ஆய்வு செய்யவும், அமைதி, மற்றும் ஒப்புரவு குறித்த நம்பிக்கையை ஊட்டவும், வன்முறையற்ற வழிகளுக்கு மனம்திரும்பும் பாதையைச் சிந்திக்கவும், இக்கருத்தரங்கு உதவியது என்று, இதில் பங்குபெற்றோர் கூறினர்.

வன்முறையற்ற நிலை என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல, மாறாக, அது வாழ்வின் பாதை என்று சுட்டிக்காட்டிய பங்கேற்பாளர்கள், பிறருக்குக் காட்டவேண்டிய மதிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகப் பலத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறையற்ற வழிகளின் முக்கியத்துவம், இக்கருத்தரங்கில் அதிகம் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

பெறுவதையும், கொடுப்பதையும், ஒன்றிணைப்பதையும், நம்பிக்கை கொள்வதையும் நோக்கி மனம் திரும்ப, வன்முறையற்ற வழிகளும், அமைதியும் நம்மை அழைக்கின்றன என்ற கருத்து, இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2019, 17:03