தேடுதல்

Vatican News
தோட்டக்கலை தோட்டக்கலை  (AFP or licensors)

பெய்ஜிங் அருங்காட்சியகத்தில் திருப்பீடத்தின் அரங்கம்

பெய்ஜிங்கில் ஏறக்குறைய 200 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படவுள்ள திருப்பீடத்தின் அரங்கத்தினுள், வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள இயற்கை மருந்துகள் சார்ந்தவை வைக்கப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சீனாவின் பெய்ஜிங் நகரில், “பசுமையில் வாழ்ந்திடுவோம், சிறப்புடன் வாழ்ந்திடுவோம்” என்ற தலைப்பில், ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து, அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெறும், பன்னாட்டு அருங்காட்சியகத்தில், திருப்பீடம் அமைக்கவுள்ள அரங்கம் பற்றி, ஏப்ரல் 16, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

பெய்ஜிங் நகரில் இடம்பெறவுள்ள பன்னாட்டு எக்ஸ்போவில் திருப்பீடம் அரங்கம் அமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய, கலாச்சார திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள், சீன மக்கள் குடியரசின் அழைப்பின்பேரில் இதில் பங்குபெறுவதாகத் தெரிவித்தார்.

தோட்டக்கலை பற்றிய இந்த பன்னாட்டு அருங்காட்சியகத்தின் தலைப்பானது, ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்த, Laudato Si என்ற திருமடலை மையப்படுத்தி அமைக்கப்படும் எனவும், கர்தினால் ரவாசி அவர்கள் அறிவித்தார்.

திருப்பீடத்தின் அரங்கம், ஏப்ரல் 29ம் தேதி திறக்கப்படும் என்றும், அந்நிகழ்வில், 2019ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி திருப்பீடத்திற்கென அர்ப்பணிக்கப்படும், அன்று, சுற்றுச்சூழல் குறித்த ஒரு கருத்தரங்கு நடைபெறும் என்றும், கர்தினால் ரவாசி அவர்கள் மேலும் அறிவித்தார்.

பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு, திருப்பீட குழுவின் தலைவராக கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்களும், உதவித் தலைவராக, கலாச்சார திருப்பீட அவையின் உதவித் தலைவர் அருள்பணி Tomaz Trafny அவர்களும், 2017ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

16 April 2019, 15:24