தேடுதல்

சிரியாவில் அமைதி பற்றிய ஐ.நா. கூட்டம் சிரியாவில் அமைதி பற்றிய ஐ.நா. கூட்டம் 

உலகளாவிய சமுதாயம், நாடுகளின் குடும்பம்

ஏப்ரல் 24, இப்புதனன்று, பல்வேறு நாடுகளின் பங்கெடுப்புடன் உருவாகும் அமைதி குறித்த முதல் உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி, ஏப்ரல் 24,25 ஆகிய தேதிகளில், ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா.பொது அவையின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகின் அனைத்து மக்களின் நலனுக்காக, பல்வேறு நாடுகள் இணைந்து தங்களை அர்ப்பணிக்கும்போது, உலகளாவிய சமுதாயம், நாடுகளின் குடும்பம் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார்.

பல்வேறு நாடுகளின் பங்கெடுப்புடன் உருவாகும் அமைதி குறித்த உலக நாளைச் சிறப்பித்து, அதை ஊக்குவிப்பதற்கென நடைபெற்ற ஐ.நா. பொது அவையின் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக, ஐ.நா.வில் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு உரைத்தார்.

ஒரு பொதுவான நலனுக்காகப் பல்வேறு நாடுகள் செயல்பட முனையும்போது, அரசுகள், பன்னாட்டு அமைப்புகள், நன்மனம் கொண்ட அனைத்து மனிதர்கள் ஆகியோரின் ஆதரவு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி, பொது நலன் மற்றும் தேவையில் இருப்போரின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவதாய் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.  

இதன் வழியாக, ஒவ்வொரு மனிதரும், உலகலாவிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்ற உணர்வில் வரவேற்கப்படுவார்கள் மற்றும், பங்கெடுப்பார்கள் என்றும் உரைத்த பேராயர் அவுசா அவர்கள், அரசியல் தூதரக அதிகாரிகள், இவ்வாண்டு தொடக்கத்தில் வத்திக்கானில் திருத்தந்தை சந்தித்தவேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய நான்கு கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2019, 15:28