தேடுதல்

Vatican News
அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள் அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள்  (Vatican Media)

மனித சமுயத்தின் இலக்கு, இறைவனோடு ஒன்றித்து வாழ்வதாகும்

பிளாரன்ஸ் நகரின் கிழக்கேயுள்ள குன்றுக்கு உங்களையெல்லாம் நினைவால் அழைத்துச் செல்கிறேன், இந்தக் குன்று, நூற்றாண்டுகளாக, அர்மேனிய மறைசாட்சி Miniatoவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அந்தக் குன்றிலிருந்தே, பிளாரன்ஸ் நகரின் உண்மையான அழகைக் காண இயலும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்களுக்கும், மார்ச் 15ம் தேதி கடைசி தியான உரைகளை வழங்கிய அருள்பணி பெர்னார்தோ ஜியான்னி அவர்கள், ‘மலைமேல் உள்ள நகரம்’ என்ற தலைப்பில், சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

இம்மண்ணுலகிற்கும், விண்ணுலகிற்கும் இடையேயுள்ள ஒரு கலாச்சாரத்தையும், பிளாரன்ஸ் நகரத்திற்கு ஓர் அரசியல் கனவையும் கண்ட ஜார்ஜோ ல பிரா அவர்களையும் மாரியோ லுட்சி அவர்களின் கவிதையையும் மேற்கோள்காட்டி, தியானயுரையாற்றினார், அருள்பணி பெர்னார்தோ.

அனைத்து மனித வரலாற்றின் முடிவு பற்றிய காட்சி பற்றிக்கூறும் திருவெளிப்பாடு நூல் 21ம் பிரிவு வார்த்தைகள் வழியாக, மலைமீதுள்ள நகரம் பற்றிய உருவகத்தை சிந்தனைகளை எடுத்துக்கொண்ட அருள்பணி பெர்னார்தோ அவர்கள், புதிய எருசலேமாகிய மண்ணகத்தில், சாவும், அழுகையும், துன்பமும், துயரமும் இருக்காது, ஏனெனில் கடந்தகாலக் காரியங்கள் அனைத்தும் கடந்துவிட்டன என்றார்.

மனித சமுதாயத்தின் இலக்கு, கடவுளோடு ஒன்றித்து வாழ்வதாகும் எனவும், நகரங்களும், கலாச்சாரங்களும், கடவுள் வாழும் இடங்கள் எனவும் விளக்கினார், அருள்பணி பெர்னார்தோ.

15 March 2019, 15:31