ஆயர்கள் மாமன்றத்தில் "சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் ஆயர்கள் மாமன்றத்தில் "சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் 

திருத்தந்தை வழங்கிய 21 கருத்துக்களின் தொகுப்பு

அருள்பணியாளர் மற்றும், துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்ள விரும்பும் பொதுநிலையினரை, உளவியல் முறையில் மதிப்பீடு செய்தல்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்திற்கு முன்னேற்பாடாக, உலகின் பல பகுதிகளில் ஆயர் பேரவைகள் மேற்கொண்ட விவாதங்களிலிருந்து வெளிவந்த 21 கருத்துக்களின் தொகுப்பு ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 21, இவ்வியாழனன்று தன் உரையின் துவக்கத்தில், பிரதிநிதிகளுக்கு வழங்கினார். இந்த தொகுப்பின் அடிப்படையில், பிரதிநிதிகள், குழு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

திருஅவையில் அருள்பணியாளர்களால் பாலியல் முறைகேடுகளுக்குப் பலியானவர்களைப் பாதுகாத்தல் மற்றும், அம்முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துதல் போன்றவற்றிற்கு புதிய நடைமுறைகளைப் பரிந்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளான அருள்பணியாளர்களை, குருத்துவப் பணியிலிருந்து நீக்குதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேய்ப்புப்பணி வழியாக உதவுதல், அருள்பணியாளர் மற்றும், துறவு வாழ்வைத் தேர்ந்துகொள்ள  விரும்பும் பொதுநிலையினரை, உளவியல் முறையில் மதிப்பீடு செய்தல் போன்றவற்றிற்கும், புதிய நடைமுறைகளைப் பரிந்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோமன் கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுத்து அவரின் வழிநடத்துதலுக்குத் தங்களைக் கையளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிப்ரவரி 22, இவ்வெள்ளி காலை அமர்வுகள் குறித்து, கர்தினால் சூபிச் அவர்கள் தலைமையிலான குழு, செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2019, 15:14