தேடுதல்

Vatican News
கோவிலினுள்  எதிர்க் கட்சி  தலைவரும் மக்களும் கோவிலினுள் எதிர்க் கட்சி தலைவரும் மக்களும்  (AFP or licensors)

திருப்பீடத்திற்கு வந்த வெனிசுவேலா பிரதிநிதிகள் குழு

வெனிசுவேலா நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு, நீதியும், அமைதியும் நிறைந்த ஒரு தீர்வு, அவசரமாகக் காணப்படவேண்டும் என்பது, திருப்பீடத்தின் ஆவல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனிசுவேலா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் குழு ஒன்றை திருப்பீடச் செயலகம், இத்திங்களன்று சந்தித்ததாகவும், வெனிசுவேலா நாட்டிற்காக, திருத்தந்தை, மற்றும், திருப்பீடம் கொண்டுள்ள அக்கறை மற்றும் அருகாமை ஆகியவை, இக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை அறிவித்தது.

திருப்பீடத்திற்கு வெனிசுவேலா பிரதிநிதிகள் குழு ஒன்று வந்துள்ளது குறித்த தகவலை வெளியிட்ட திருப்பீட அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளர் அலெசாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், வெனிசுவேலாவில் துன்புறும் மக்களுடன் திருத்தந்தையும் திருப்பீடமும் கொண்டிருக்கும் நெருக்கம் இவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு, நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு தீர்வு அவசரமாகக் காணப்படவேண்டும் என்ற ஆவலும் வெளியிடப்பட்டதாகக் கூறினார்.

நாட்டில் இரத்தம் சிந்தலைத் தவிர்க்கும் நோக்கத்தில், அனைத்து மக்களின் நன்மையை மனதில்கொண்டு, ஒவ்வொருவரின் மனித உரிமைகளை மதித்து, நாட்டின் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும் என்பது, அக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார் திருப்பீட அதிகாரப்பூர்வப் பேச்சாளர் ஜிசோத்தி.

இதற்கிடையே, ஜனநாயக மதிப்பீடுகளுக்கு ஊக்கத்தை வழங்கும் வண்ணம் கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என வெனிசுவேலா ஆயர்கள், நாட்டின் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

12 February 2019, 16:38