தேடுதல்

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் 

இலாத்தரன் ஒப்பந்தம் குறித்து திருப்பீடச் செயலர்

மனித மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அமைதி நிறை சமூகங்களை கட்டியெழுப்புவதிலும் திருப்பீடம் ஆற்றிவரும் பெரும்பங்களிப்பு தொடர்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்களைப் பாதுகாப்பதில் திருப்பீடம் தொடர்ந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது என பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆற்றிய ஓர் உரையில் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலிக்கும் வத்திக்கானுக்கும் இடையே இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் 90ம் ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, உரோம் நகரின் லும்சா பல்கலைக்கழக மாணவர்களுக்கு, இலாத்தரன் ஒப்பந்தம் குறித்து ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வுலகம் இன்று எதிர்நோக்கிவரும் அமைதிக்கான சவால்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மனித மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அமைதி நிறை சமூகங்களை கட்டியெழுப்புவதிலும் திருப்பீடம் தொடர்ந்து ஆற்றிவரும் பெரும்பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

மனித குலத்திற்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில், கருத்துப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் திருஅவை, வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிடாமல், நாடுகளிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என தன் உரையில், மேலும் கூறினார், கர்தினால் பரோலின்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2019, 14:04