பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

பல்சமய உரையாடல் பன்னாட்டு கருத்தரங்கில் பேராயர் அவுசா

பல்சமய உரையாடல், உலக சமாதானத்திற்கும், உண்மையான மனித முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடவுள் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், மனிதரின் உடன்பிறந்த நிலை மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் இஸ்லாமிய தலைமைக்குருவும் கூறியுள்ளனர் என்பதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், "பல்சமய உரையாடல்: சமூக ஒருங்கிணைப்பையும், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தையும் உருவாக்குதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

பிப்ரவரி 5, இச்செவ்வாயன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், பல்சமய உரையாடல், உலக சமாதானத்திற்கும், உண்மையான மனித முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கூறிய சொற்களை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவரும் தங்கள் சுய அடையாளத்தை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, அடுத்தவரைச் சந்திக்க முன்வரும் வேளையில், உண்மையான உரையாடல்கள் நிகழ வாய்ப்புண்டு என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2019, 15:42