ஜெனீவாவிலுள்ள ஐ.நா அவை கூட்டத்தில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovic ஜெனீவாவிலுள்ள ஐ.நா அவை கூட்டத்தில் பங்கேற்கும் பேராயர் Ivan Jurkovic 

புலம்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து பாதுகாப்பு அவசியம்

புலம்பெயர்வு விவகாரம், எண்ணிக்கையில் அல்ல, மாறாக, தனக்கென சொந்த வரலாறு, கலாச்சாரம், உணர்வுகள் மற்றும் ஏக்கங்களைக் கொண்ட மனிதர்களைச் சார்ந்தது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ள, உலகளாவிய திட்டத்தில், அவர்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்குரிய முயற்சிகள் இணைக்கப்பட வேண்டுமென திருப்பீடம் விரும்புகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் கூறினார்.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர்மட்ட குழுவின் 144வது கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்த திருத்தந்தை கூறிய கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்வு விவகாரம் எண்ணிக்கையில் அல்ல, மாறாக, தனக்கென சொந்த வரலாறு, கலாச்சாரம், உணர்வுகள் மற்றும் ஏக்கங்களைக் கொண்ட மனிதர்களைச் சார்ந்தது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், இந்த மக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

கருக்கலைப்புக்கு சட்டமுறையாக வழங்கப்படும் எந்தவிதமான அங்கீகாரத்தையும் திருப்பீடம் ஏற்பதில்லை எனவும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2019, 14:58