தேடுதல்

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பரதிநிதிகளும், இந்திய இறையியலாளர்களும் பெங்களூருவில் சந்திப்பு திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பரதிநிதிகளும், இந்திய இறையியலாளர்களும் பெங்களூருவில் சந்திப்பு 

ஆசிய இறையியலில் திருப்பீடம் ஆர்வம்

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இக்கால சமுதாயச் சூழலுக்கு ஏற்ப, ஆசிய இறையியலில் காணப்படும் வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தில், பாங்காக் மற்றும் பெங்களூருவில், கூட்டங்களை நடத்தியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பரதிநிதிகளும், இந்திய இறையியலாளர் மற்றும் ஆயர்களுக்கு இடையே, கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, கடந்த வாரத்தில் பெங்களூருவில் நான்கு நாள் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர், இயேசு சபை கர்தினால் லூயிஸ் லதாரியா, அதன் செயலர் பேராயர் Augustine Di Noia, மற்றும் இரு அலுவலகர்களும், இந்தியாவின் முன்னணி இறையியலாளர்களும், கர்தினால்கள், ஆயர்கள், பேராயர்கள் என 18 பேரும், சனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை, பெங்களூருவில் கூடி கலந்துரையாடினர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயர் தாப்ரே அவர்கள், இக்கூட்டம் பற்றி தெரிவிக்கையில், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இந்திய இறையியல் பற்றி அறிவதில் ஆர்வமாய் இருந்தது எனவும், இந்தியாவில் இறையியல் ஏற்கப்படுவதை வெளிப்படுத்துகின்றவர்களாக, இறையியலாளர்கள் நோக்கப்பட வேண்டுமென, அப்பேராயம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

இக்கால சமுதாயச் சூழலுக்கு ஏற்ப, ஆசிய இறையியலில் காணப்படும் வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்தில், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இந்தியாவில் கூட்டம் நடத்துவதற்கு முன்னர், பாங்காக்கிலும் கூட்டம் நடத்தி ஆசிய இறையியலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2019, 15:35