வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolas Maduro அவர்கள், இரண்டாவது முறையாக, பதவியேற்ற நிகழ்வு வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolas Maduro அவர்கள், இரண்டாவது முறையாக, பதவியேற்ற நிகழ்வு 

திருப்பீடம், வெனெசுவேலாவுடன் தூதரக உறவுகளை...

கடும் மனிதாபிமான மற்றும் சமுதாயப் பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் வெனெசுவேலா நாட்டு மக்களுக்கு, திருப்பீடம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“நீங்கள் பார்க்கின்ற துன்பங்கள், உங்களை அச்சுறுத்த அனுமதிக்காதீர்கள். பொறுமை மற்றும் இரக்கம்நிறை அன்பை, நாம் பெறுகின்ற திருச்சிலுவை மற்றும் திருநற்கருணையின்முன், அத்துன்பங்களை வையுங்கள்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், சனவரி 15, இச்செவ்வாயன்று பதிவாகியிருந்தன.

மேலும், பல்வேறு வழிகளில் துன்புறும் வெனெசுவேலா நாட்டு மக்களுக்கு உதவுவதில், திருப்பீடமும், அந்நாட்டு ஆயர்களும் இணைந்து, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இடைக்கால இயக்குனர் அலெசாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

வெனெசுவேலா நாட்டு அரசுத்தலைவர் பதவியேற்பு நிகழ்வில் திருப்பீட பிரதிநிதிகள் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த, ஜிசோத்தி அவர்கள், இவ்வாறு கூறினார்.

திருப்பீடம், வெனெசுவேலாவுடன் தூதரக உறவுகளைத் தொடர்கின்றது எனவும், பொதுநலனை ஊக்குவித்தல், அமைதியைப் பாதுகாத்தல், மனித மாண்பு மதிக்கப்படுவதை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளில், திருப்பீட தூதரகம் ஈடுபட்டு வருகின்றது எனவும், ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

இக்காரணங்களால், வெனெசுவேலா அரசுத்தலைவர் பதவியேற்பு நிகழ்வில் திருப்பீட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள் என்றுரைத்த ஜிசோத்தி அவர்கள், கடும் மனிதாபிமான மற்றும் சமுதாயப் பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் வெனெசுவேலா நாட்டு மக்களுக்கு, திருப்பீடம், அந்நாட்டு ஆயர்களுடன், இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்றும் கூறினார்.

வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolas Maduro அவர்கள், இரண்டாவது முறையாக, பதவியேற்ற நிகழ்வு, கடந்த வாரத்தில் நடைபெற்றது.

இதற்கிடையே, அரசுத்தலைவர் தேர்தலின் சட்ட விதிமுறை குறித்து ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2019, 15:30