அருளாளரான Margherita Bays அருளாளரான Margherita Bays 

மறைசாட்சிகளின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு

1936ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டில் 14 அருள்சகோதரிகள் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் மற்றும் முத்திப்பேறுபெற்ற நிலைகளுக்கு உயர்த்துவதற்கென இடம்பெற்ற ஒரு புதுமையையும், புண்ணிய வாழ்வுப் பண்புகளையும், ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட, புனிதர்நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், சனவரி 15, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, 17 பேர் பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் La Pierrazவில் 1815ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பிறந்த முத்திப்பேறுபெற்ற, அசிசி நகர் புனித பிரான்சிசின் மூன்றாம் சபையைச் சார்ந்த Margarita Bays அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை இடம்பெற்றுள்ளது. Margarita Bays அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டின் Siviriez வில் 1879ம் ஆண்டு, ஜூன் 27ம் நாளன்று காலமானார். பிரான்சிஸ்கன் சபையின் இறைஊழியர் Maria del Carmen மற்றும் அவரோடு சேர்ந்து 13 அருள்சகோதரிகள், 1936ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர். 

போலந்து நாட்டில் 1872ம் ஆண்டு பிறந்து, 1936ம் ஆண்டில் காலமான, அதிதூதர் மிக்கேல் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பிக்க உதவிய Anna Kaworek, Puerto Rico நாட்டில் 1892ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டில் காலமான, நோயாளர் பராமரிப்பு சபையின் அருள்சகோதரி Maria Soledad Sanjurjo Santos ஆகிய இரு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகளையும், திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2019, 15:29