தேடுதல்

புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை வெளியிட்ட இரு நூல்கள் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை வெளியிட்ட இரு நூல்கள் 

மனித வர்த்தகம் குறித்து திருப்பீடம் வெளியிட்ட இரு நூல்கள்

"மனித வர்த்தகத்தைக் குறித்து மேய்ப்புப்பணி கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பிலும், "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற தலைப்பிலும் இரு நூல்களை, புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை வெளியிட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் வாழும் சமகாலச் சமுதாயத்தில் மனித வர்த்தகம் ஒரு திறந்த காயம் என்றும், உலகளாவிய இந்தக் காயத்தை ஆற்றுவதற்கு உலகளாவிய முயற்சிகள் தேவை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், இவ்வியாழன் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஒரு பகுதியாக செயலாற்றிவரும் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலாரான அருள்பணி மைக்கில் செர்னி அவர்கள், இவ்வியாழனன்று, இத்துறை, இரு நூல்களை வெளியிட்ட நிகழ்வில் இவ்வாறு பேசினார்.

"மனித வர்த்தகத்தைக் குறித்து மேய்ப்புப்பணி கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பிலும், "நம்பிக்கையின் பாதைகளில் ஒளிச் சுடர்கள்" என்ற தலைப்பிலும் இரு நூல்களை, புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் துறை இவ்வியாழனன்று வெளியிட்டது.

"மனித வர்த்தகத்தைக் குறித்து மேய்ப்புப்பணி கண்ணோட்டங்கள்" என்ற நூல் ஒரு பயிற்சி நூல் என்றும், இதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மறைமாவட்டமும், பங்குத்தளமும் புலம்பெயர்ந்தோரை மையப்படுத்திய பயிற்சிகளைப் பெறமுடியும் என்று அருள்பணி செர்னி அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 15:15