தேடுதல்

“Leaders for Peace" கூட்டத்தில் பங்கேற்ற இளையோர் “Leaders for Peace" கூட்டத்தில் பங்கேற்ற இளையோர் 

மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு பயிற்சி

உண்மையான கலந்துரையாடல், மற்றவர் தன்னிலே நல்லவர் என்ற உணர்விலும் உறுதிப்பாட்டிலும் இடம்பெறுவதாகும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மனிதரின் மாண்பும் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டு, மதிக்கப்படுவதற்கு மக்களுக்கு பயிற்சியளிக்கப்படுவது, உலகில் அமைதி நிலவுவதற்கு, மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. தலைமையகத்தில் கூறினார்.

மனித உரிமைகளின் அனைத்துலக அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, டிசம்பர் 10, இத்திங்களன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், உண்மையான கலந்துரையாடல் பற்றி விளக்கினார்.

உண்மையான கலந்துரையாடல் என்பது, மற்றவர் தன்னிலே நல்லவர் என்ற உணர்விலும் உறுதிப்பாட்டிலும், எனக்கும் உலகுக்கும் நல்லவர் என்ற ஏற்பிலும், மற்றவர் எனக்கு அச்சுறுத்தலாகவோ, போட்டியாளராகவோ இல்லை என்ற எண்ணத்திலும் இடம்பெற வேண்டியதாகும் என்றும் பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

“அமைதிக்காகத் தலைவர்கள்: மனித உரிமைகளுக்கு Rondine இளையோர் அழைப்பு” அன்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2018, 15:45