பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னை மரியா திருத்தலம் பிரான்ஸ் நாட்டின் லூர்து அன்னை மரியா திருத்தலம் 

திருத்தலங்களின் பொறுப்பாளர்கள் - பன்னாட்டுக் கூட்டம்

மக்களைக் கவர்ந்திழுக்கும் திருத்தலங்கள், தங்கள் பெருமைகளை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில், செபம், தியானம், பிறரன்பு பணிகள் ஆகியவற்றை வளர்க்கும் இடங்களாக மாறவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கென, நவம்பர் 27, இச்செவ்வாய் முதல், 29 இவ்வியாழன் முடிய, உரோம் நகரில் பன்னாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கை, இத்திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் துவக்கிவைத்தார்.

நமது திருத்தலங்கள், மக்களின் மனமாற்றத்திற்கும், புதியவழி நற்செய்தி அறிவிப்பிற்கும் உகந்த இடங்களாக விளங்குவதோடு, கிறிஸ்தவ வாழ்வின் உயிர் நாடியான பிறரன்பு பணிகளுக்கும் உரிய இடங்களாக திகழவேண்டும் என்று, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், தன் துவக்க உரையில் கூறினார்.

மக்களைக் கவர்ந்திழுக்கும் திருத்தலங்கள், தங்கள் பெருமைகளை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குப் பதில், செபம், தியானம், பிறரன்பு பணிகள் ஆகியவற்றை வளர்க்கும் இடங்களாக மாறவேண்டும் என்று, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2018, 14:39