இறையடியார் Michele Giedrojc அவர்களின் திரு உருவ சிலை இறையடியார் Michele Giedrojc அவர்களின் திரு உருவ சிலை 

புனிதர் பட்ட நிலைகளுக்கென பெயர்கள் சமர்ப்பிப்பு

புண்ணியம் மிகுந்த பண்புகளுக்காக 11 பேர், மறைசாட்சிய மரணத்திற்கென 3 பேர், புதுமைகள் நிகழ்த்தியதற்கென 2 பேர் என, புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு 16 பெயர்கள் சமர்ப்பிப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் Angelo Becciu அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 7 இப்புதன் மாலை சந்தித்து, அவரிடம் பரிந்துரைத்த 16 இறையடியார்களின் புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு, திருத்தந்தை தன் ஒப்புதலை வழங்கியுள்ளார்.

15ம் நூற்றாண்டிலிருந்தே லித்துவேனியா மற்றும் போலந்து மக்களால் புனிதராக கருதப்படும், இறையடியார்  Michael Giedrojć அவர்களின் பெயரை, அவரின் புண்ணியம் மிகுந்த பண்புகளுக்காக, கர்தினால் பெச்சியு அவர்கள் பரிந்துரைக்க, திருத்தந்தை அதற்கு ஒப்புதல் அளித்தார்.

மேலும், இத்தாலியின் பொது நிலையினர்களான, அருளாளர்கள் Edvige Carboni, Benedetta Bianchi Porro ஆகியோரின் பரிந்துரைகளால் நிகழ்ந்த புதுமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு இவர்களின் பெயர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.

இவர்கள் தவிர, இஸ்பெயின் நாட்டில் திருமறைக்காக கொல்லப்பட்ட Angelo Cuartas Cristóbal, மற்றும், அவரின் உடன் குருத்துவ மாணவர்கள் எட்டு பேர்,  மறைசாட்சியாக உயிரிழந்த குடும்பத் தலைவர் Mariano Mullerat i Soldevila, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்து குவாத்தமாலா நாட்டில் மறைசாட்சியான அருள்சகோதரர் James Alfred Miller ஆகியோரின் மறைசாட்சிய சான்றுகளும் திருத்தந்தையின் முன்னிலையில் இப்புதன் மாலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

லித்துவேனியாவில்  பிறந்த இறையடியார் Giedrojć தவிர, இத்தாலியின் இறையடியார்கள் பேராயர் John Jacono, அருள்பணியாளர்கள் John Ciresola, Luigi Bosio, ஆண் துறவி Luigi Maria Raineri, பெண் துறவி Maria Addolorata del Sacro Costato, பொதுநிலையினர் Lodovico Coccapani, இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் துறவிகள் Maria Antonia di Gesù,  Arcangela Badosa Cuatrecasas, பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆயர் Alfredo Maria Obviar, ஈக்குவதோர் நாட்டில் பிறந்து மீட்பரின் அகுஸ்தீனார் புதல்வியர்  (Congregation of the Augustinian Daughters of the Most Holy Saviour) சபையைத் தோற்றுவித்த Raffaella della Passione ஆகிய 10 பேரின் பெயர்களும், அவர்களின் புண்ணியம் மிகுந்த பண்புகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 14:44