பங்களாதேஷ் நாட்டில் பல்சமய உரையாடல் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பங்களாதேஷ் நாட்டில் பல்சமய உரையாடல் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

நன்னெறியை நிலைநாட்ட உள்ளார்ந்த மாற்றங்கள் தேவை

நாடு, இனம், மதம் என்ற பல எல்லைகளைத் தாண்டி, நன்னெறியை அனைவரும் பின்பற்றும் அவசியத்தை இவ்வுலகிற்கு நாம் உணர்த்தவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

 

உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, உலகத்தில் நன்னெறியை நிலைநாட்ட இயலாது என்பதை அனைத்து மதங்களும் உணரவேண்டும் என்றும், அத்தகையத் தேடலில் கிடைக்கும் உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி, பன்னாட்டு பல்சமயக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

நவம்பர் 5, இத்திங்கள் முதல், 7, இப்புதன் முடிய, கிறிஸ்தவர்களுக்கும், டாவோயினருக்கும் இடையே, சிங்கப்பூரில் நடைபெற்ற உலகக் கருத்தரங்கில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

உலகத்தைக் குறித்த கண்ணோட்டத்திலும், ஆன்மீகப் பாதைகளிலும், கிறிஸ்தவர்களுக்கும், டாவோயினருக்கும் வேறுபாடுகள் இருப்பினும், பொதுவான நன்னெறி விழுமியங்களில் இவ்விரு மதத்தினரும் ஒத்த கருத்துக்கள் கொண்டுள்ளனர் என்று, ஆயர் Ayuso Guixot அவர்கள் எடுத்துரைத்தார்.

நன்னெறி விழுமியங்களைப் பின்பற்றுவதில் குறைபாடுகள் உள்ளதால், அது, பொருளாதாரம், அரசியல், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் என்ற பல நிலைகளில் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய ஆயர் Ayuso Guixot அவர்கள், நாடு, இனம், மதம் என்ற பல எல்லைகளைத் தாண்டி, நன்னெறியை அனைவரும் பின்பற்றும் அவசியத்தை இவ்வுலகிற்கு நாம் உணர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2018, 15:46