தேடுதல்

ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

பன்னாட்டு உறவு, மனித வர்த்தகம் குறித்து திருப்பீடம்

நாடுகளுக்கிடையே நம்பிக்கை குறைந்து வருவது மட்டுமல்லாமல், நாடுகளுக்குள்ளும் மக்களிடம் அரசியல் அமைப்புக்கள் மீது நம்பிக்கை குறைந்து வருகின்றது - பேராயர் அவுசா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாடுகள் இணைந்து ஒரே நோக்கத்துடன் செயலாற்றுவதன் அவசியம் குறித்தும், மனிதர்கள் வர்த்தகப் பொருள்களாக கடத்தப்படுவது, தடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், ஐ.நா.தலைமையகத்தில் நிகழ்ந்த இருவேறு கூட்டங்களில், திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் உரையாற்றினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், 'நாடுகளுக்கிடையே ஒன்றிணைந்த பணி' என்ற தலைப்பில் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

நாடுகளுக்கிடையே நம்பிக்கை குறைந்து வருவது மட்டுமல்லாமல், நாடுகளுக்குள்ளும் மக்களிடம் அரசியல் அமைப்புக்கள் மீது நம்பிக்கை குறைந்து வருகின்றது என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் கவலையை வெளியிட்டார்.

ஆயுதக்களைவு குறித்த ஒப்பந்தங்கள் முடங்கிப் போயிருப்பதும், வளர்ச்சித் திட்டங்கள் முன்னோக்கிச் செல்ல இயலாமல் இருப்பதும், நாடுகளுக்கிடையே நம்பிக்கை குறைந்துள்ளதன் வெளிப்பாடு என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மேலும், 'மனிதர்களை வர்த்தகப்பொருள்களாக கடத்துதல், மற்றும், மனித அடிமை முறைகள் முடிவுக்கு வருதல்' என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றொரு ஐ.நா.அவை கூட்டத்தில், பேராயர் அவுசா அவர்கள் வழங்கிய உரையில், இக்கொடுமைகளைத் தடுப்பதற்கு தேவையான செயல்முறைத் திட்டங்கள் தீட்டப்படும் அதே வேளையில், நவீன அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவனம் தேவை என்று எடுத்துரைத்தார்.

வர்த்தகப் பொருள்களாக மனிதர்கள் கடத்தப்படும் நிலைகளைத் தடுக்க, 70 நாடுகளைச் சேர்ந்த 22 கத்தோலிக்கத் துறவு அமைப்புக்களின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிவது குறித்தும், பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2018, 16:33