தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு 

இளையோருடன் இணைந்து நடக்கவேண்டிய தேவை

உலக ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்த வழிகாட்டி ஏடு, திருப்பீடத்தில் வெளியிடப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரை மையப்படுத்தி, அக்டோபர் 3, இப்புதன் முதல் 28ம் தேதி முடிய, வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டம் குறித்த விவரங்களை வெளியிட, பத்திரிகையாளர் சந்திப்பு, இத்திங்கள் காலை திருப்பீட்ட பத்திரிகைத்துறை அலுவலகத்தில் இடம்பெற்றது.

உலக ஆயர்கள் மாமன்ற பொதுச்செயலர் கர்தினால் லொரன்ஸோ பால்திசேரி, பொது ஒருங்கிணைப்பாளர், கர்தினால் செர்ஜியோ த ரோக்கா, இம்மாமன்ற நேரடிச் செயலர் ஆயர் ஃபாபியோ பெனே ஆகியோர், இந்த மாமன்றக் கூட்டம் குறித்த விளக்கங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் எடுத்துரைத்தனர்.

'இளையோர், விசுவாசமும், அழைத்தலை தேர்ந்து தெளிதலும்' என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இம்மாமன்றக் கூட்டம் குறித்து எடுத்துரைத்த கர்தினால் பால்திசேரி அவரகள், உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில், கீழைவழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் தலைவர்கள், துறவுசபை தலைவர்கள் கூட்டமைப்பினால் தேர்வுச் செய்யப்பட்ட 10 பேர், உட்பட, மொத்தம் 266 பேரவைத் தந்தையர்கள் கலந்து கொள்வர் என அறிவித்தார்.

இவ்வுலக மாமன்ற கூட்டத்திற்கென, ஒவ்வோரு நாட்டின் ஆயர் பேரவை வழியே எடுக்கப்பட்ட தயாரிப்பு முயற்சிகள் பற்றியும் விளக்கிக் கூறிய கர்தினால் பால்திசேரி அவர்கள், இளையோருடன் இணைந்து நடக்கவேண்டிய தேவையை உணர்ந்ததாக இந்த ஆயர் மாமன்றக் கூட்டம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாமன்றக் கூட்டத்திற்கான வழிகாட்டி ஏடு ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2018, 16:26