தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் Taizé குழுமத்தின் உலகத் தலைவர், சகோதரர் அலாய் திருத்தந்தையுடன் Taizé குழுமத்தின் உலகத் தலைவர், சகோதரர் அலாய்  

இளையோரைக் குறித்து Taizé குழும உலகத் தலைவரின் பேட்டி

நம்பகத்தன்மையுடன் வாழும் ஆண்களும் பெண்களும் வழங்கும் சாட்சிய வாழ்வே, இளையோரை அதிகம் கவர்கிறது - Taizé குழுமத்தின் உலகத் தலைவர், சகோதரர் அலாய்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பகத்தன்மையுடன் வாழும் ஆண்களும் பெண்களும் வழங்கும் சாட்சிய வாழ்வே, இளையோரை அதிகம் கவர்கிறது என்று, பிரான்ஸ் நாட்டில் இயங்கிவரும் Taizé என்ற குழுமத்தின் உலகத் தலைவர், சகோதரர் அலாய் (Brother Alois) அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இளையோரை மையப்படுத்தி, வத்திக்கானில் துவங்கியுள்ள 15வது ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள சிறப்பான அழைப்பு பெற்றுள்ள Taizé குழுமத்தின் தலைவர், சகோதரர் அலாய் அவர்கள் வழங்கிய பேட்டியில், நம்பிக்கையை வளர்ப்பது எவ்விதம் என்பதே, இளையோரிடம் பெரும்பாலும் வெளிப்படும் கேள்வி என்று கூறினார்.

மன்னிப்பு இல்லாத சமுதாயம் வாழ முடியாது என்றும், மன்னிப்பு இன்றி, எதிர்காலத்தைக் குறித்த அச்சமும், சந்தேகமும் மட்டுமே இருக்க முடியும், அத்தகையச் சூழலில், இளையோர், நம்பிக்கை இழப்பது இயற்கையே என்று சகோதரர் அலாய் அவர்கள் கூறினார்.

மேலும், வத்திக்கானில் துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தை முன்னிட்டு, செபங்கள் மேற்கொள்ள விழையும் இளையோருக்கென, அக்டோபர் 6 வருகிற சனிக்கிழமை முதல், அக்டோபர் 28ம் தேதி முடிய, பிரான்ஸ் நாட்டின் அனைத்து துறவு இல்லங்களும், இளையோருக்கென திறந்து வைக்கப்படும் என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

04 October 2018, 15:57