15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமர்வுகளில் ஒன்று 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் அமர்வுகளில் ஒன்று 

வருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்

ஆயர்கள் மாமன்ற அமர்வில், இளையோருக்கு தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதில் திருஅவையின் பங்கு வலியுறுத்தப்பட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'இயேசுவைத் தேடும் இளையோர், தீபமாக எரிந்து கொண்டிருக்கும் நாளைய தலைவர்கள்' என்ற மையக்கருத்துடன் இச்செவ்வாய்க்கிழமை ஆயர் மாமன்றக் கூட்டத்தின் காலை அமர்வு நடத்தப்பட்டது.

நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக, பிரான்சின் இளையோர், லூர்து அன்னை திருத்தலத்தில் நடத்தியக் கூட்டத்தில் கலந்து கொண்டோரின் 1500 அஞ்சல் அட்டைகள், இச்செவ்வாயன்று பிரான்ஸ் ஆயர்களால் திருத்தந்தைக்கு பரிசாக வழங்கப்பட்டன.

'தேர்ந்தெடுத்தல்' என்பது குறித்து துவக்க உரை வழங்கிய கர்தினால் செர்ஜியோ தா ரோக்கா அவர்கள், இது மனமாற்றத்தையும், அன்பில் முன்னோக்கிச் செல்வதையும் எதிர்பார்க்கின்றது என்றார்.

இதே அமர்வில், இந்தியாவின் இளையோர் பிரதிநிதி, பெர்சிவால் ஹோல்ட் அவர்களும் உரை வழங்கினார்.

மேலும், நாளைய தலைவர்களாகிய இன்றைய இளையோருக்கு, தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதில் திருஅவையின் பங்கு, இளையோரின் வருங்காலத்திற்கான அவர்களின் பொறுப்பை  உணர வைத்தல், குடியேற்றதாரர் பிரச்சனைகள், மதங்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள், பங்குதள வாழ்வையும் பக்தி முயற்சிகளையும் புதுப்பித்து ஊக்கமூட்டி வளர்த்தல், நற்செய்தி அறிவித்தலில், இசையின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும், இச்செவ்வாய்க்கிழமை ஆயர் மாமன்ற காலை அமர்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2018, 16:59