தேடுதல்

அக்டோபர் 22ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் அக்டோபர் 22ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

சாட்சிய வாழ்வுக்குரிய பலத்தை இளையோருக்கு வழங்க வேண்டிய திருஅவை

வருங்காலத்தை இளையோரின் கைகளில் ஒப்படைக்கத் தவறியுள்ள மனித குலம், இளையோரின் கனவுகளை நிறைவேற்ற முடியாத ஓர் உலகையும் படைத்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வருங்காலத்தை இளையோரின் கைகளில் ஒப்படைப்பதில் மனிதகுலம் தவறியுள்ளது என உலக ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்த திங்கள் தின பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார், துருக்கியில் பணியாற்றும் ஆயர் Paolo Bizzeti.

ஆயர் மாமன்றத்தின் 15வது அமர்வு குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் எடுத்துரைத்த துருக்கியின் அனத்தோலியா அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Bizzeti அவர்கள், இளையோரின் கனவுகளை நிறைவேற்ற முடியாத ஓர் உலகை படைத்துள்ளதற்காக நாம் இக்கால இளைய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறினார்.

இந்த ஆயர் மாமன்றம், இளையோரின் பல்வேறு பிரச்னைகளையும், ஒளியையும், இருண்ட பகுதிகளையும் வெளிக்கொணர்வதாக இருந்தது என்று கூறிய ஆயர், இளையோருக்கு செவிமடுத்து, அவர்களோடு இணைந்து நடக்க வேண்டிய தேவையை ஆயர்களுக்கும் திருஅவைக்கும் இம்மான்ற உரையாடல்கள் உணர்த்தின என்றார்.

இதே பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய சலேசிய சபை உலக தலைவர், Ángel Fernández Artime அவர்கள், குரலற்றவர்களாக இருக்கும் இளையோர், சாட்சிய வாழ்வை மேற்கொள்ள தேவையான பலத்தை வழங்கவேண்டியது திருஅவையின் கடமை என்று கூறினார்.

இதே கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் Frank J. Caggiano அவர்களும், கரிபியன் தீவான Martiniqueயின் பேராயர் David Macaire அவர்களும், இம்மாமன்றம் வழியாக தாங்கள் கற்றுக்கொண்ட புதிய பாடங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2018, 17:26