தேடுதல்

அக்டோபர் 12 - உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்வுகளைக் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் அக்டோபர் 12 - உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்வுகளைக் குறித்த செய்தியாளர்கள் கூட்டம் 

அக்டோபர் 12, வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றத்தில்...

பல்வேறு சமுதாய நோய்களுக்கு தகுந்த மருந்து கல்வியே என்பதை, இவ்வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் இளையோர் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருவர் தன் கலாச்சார வேர்களை இழப்பதைத் தடுக்கவும், அவர் எதிர்கொள்ளும் இலஞ்ச ஊழல், அடிப்படைவாதக் கொள்கைகள் ஆகிய அவலங்களை எதிர்த்துப் போராடவும் சிறந்த மருந்தாக அமைவது கல்வியே என்பதை, இவ்வெள்ளியன்று, உலக ஆயர்கள் மாமன்றக் கூட்டத்தில் இளையோர் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இளையோர் ஏங்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு, கிறிஸ்தவ, மற்றும் மனிதாபிமான கல்வியே தகுந்த உதவியாக அமையும் என்பதை தங்கள் பகிர்வுகளில் வலியுறுத்திய ஆயர்கள், அத்துடன், குடிபெயர்தல், ஏழ்மை, மற்றும் கலாச்சார வேர்கள் தொடர்புடைய பிரச்சனைகளும் ஆராயப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தனர்.

வெள்ளிக்கிழமை அமர்வில் உரையாற்றிய மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஒன்றிப்பு அலுவலகத்தின் இயக்குனரும், போதகருமான Tim Macquiban அவர்கள், இன்றைய உலகில் பொது நிலையினர் இயக்கங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

இதே அமர்வில், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளான ஆயர் Nikitas Lulias, ஆயர் Athanasius, லூத்தரன் உலக அவையின் பிரதிநிதி, Julia Braband நைரோபியிலிருந்து வருகை தந்துள்ள ஆங்கிலிக்கன் ஆயர் Joel Waweru Mwangi ஆகியோர் உட்பட பல சபைகளின் பிரதிநிதிகள், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2018, 17:12