புனித பாத்ரே பியோ இறையடிச் சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு நாணயம் புனித பாத்ரே பியோ இறையடிச் சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு நாணயம் 

பாத்ரே பியோ, 6ம் பவுல், 1ம் ஜான்பால் நினைவு நாணயங்கள்

புனித பாத்ரே பியோ, புனிதராகவிருக்கும் 6ம் பவுல், இறை ஊழியரான முதலாம் ஜான்பால் ஆகியோரின் நினைவாக வத்திக்கான் வெளியிடும் நாணயங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 4, இவ்வியாழனன்று, திருத்தந்தையர், மற்றும், புனிதரின் நினைவாகவும், விவிலிய நிகழ்வுகள் நினைவாகவும், வத்திக்கான், நாணயங்களை வெளியிடுகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பாத்ரே பியோ அவர்கள், 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி, இறையடிச் சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, 2 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியாகிறது.

1978ம் ஆண்டு, இறையடி சேர்ந்த அருளாளரான திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அக்டோபர் 14ம் தேதி புனிதராக உயர்த்தப்படுவதையொட்டி, 5 யூரோ, மற்றும் 10 யூரோ மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் வெளியாகின்றன.

அதேவண்ணம், 1978ம் ஆண்டு, திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதலாம் ஜான்பால் அவர்கள், 33 நாட்கள் தலைமைப்பணியை நிறைவேற்றி, செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்ததன் 40ம் ஆண்டு நினைவாக, 5 யூரோ, மற்றும் 10 யூரோ மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.

மேலும், திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள இயேசுவின் விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இரு புனித நிகழ்வுகளின் நினைவாக, 20 யூரோ, மற்றும் 50 யூரோ மதிப்புள்ள தங்க நாணயங்களும் அக்டோபர் 4, இவ்வியாழனன்று வெளியாகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 15:51