தேடுதல்

சீனாவில் ஆலயம் சீனாவில் ஆலயம்  

திருப்பீடத்துக்கும், சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம்

திருப்பீடத்துக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெற்றுள்ள இடைக்கால ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்துக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெற்றுள்ள இடைக்கால ஒப்பந்தம் குறித்து திருப்பீட செய்தித் தொடர்பாளர் கிரக் பர்க் அவர்கள் இச்சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பெய்ஜிங்கில், செப்டம்பர் 22, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்துக்கும், சீனாவுக்கும் இடையே, ஆயர்கள் நியமனம் குறித்த இடைக்கால ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. சீனாவிலுள்ள திருஅவையின் வாழ்வு, சீன மக்களின் வாழ்வு மற்றும் உலகின் அமைதிக்கு உதவும் என்ற நம்பிக்கையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. திருப்பீடத்துக்கும், சீனாவுக்கும் இடையே புரிந்துகொள்தலை ஊக்குவிக்கவும், திருஅவை பொதுவாக கவனத்தில் கொண்டுள்ள விவகாரங்கள் குறித்து உரையாடவுமென, சில காலமாகவே இவ்விரு நாடுகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடி பொதுச்செயலர் பேரருள்திரு Antoine Camilleri, சீன மக்களின் குடியரசின் வெளிவிவகாரத் துறையின் துணைத்தலைவர் Wang Chao ஆகிய இருவர் தலைமையிலான பிரதிநிதி குழுக்கள், இந்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.

Chengde புதிய மறைமாவட்டம்

மேலும், இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சீனாவில் Chengde புதிய மறைமாவட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சீன மக்களின் ஆன்மீக நல்வாழ்வை கருத்தில்கொண்டு, பெய்ஜிங் மறைமாவட்டத்தின்கீழ்

உருவாக்கப்பட்டுள்ள Chengde மறைமாவட்டத்திற்கு, நல்லாயன் பேராலயம் தலைமை பேராலயமாக அமைகின்றது. இங்கு ஏறத்தாழ 25 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர் என்று, அண்மை கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2018, 15:16