திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் 

நீதிக்காக போராடும் தலத் திருஅவை மீது அடக்குமுறை

நீதிக்காகவும், மக்களின் நியாமான போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருப்பதால், திரு அவை கட்டிடங்களும் அதிகாரிகளும் தாக்கப்படுதல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நிகராகுவா நாட்டின் வன்முறைகள் மற்றும் துன்பநிலைகள் குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு துணை அரசுத் தலைவர் மைக் பென்ஸ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருஅவையின் ஆழ்ந்த கவலையை அவரிடம் வெளியிட்டார்.

குடிமக்களுக்குரிய நல ஆதரவுத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத்தில் நிகராகுவா அரசுத் தலைவர் டேனியல் ஒர்த்தேகா அவர்கள், மாற்றங்களைக் கொண்டுவர முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெறுவது குறித்தும், மக்களுக்கு ஆதரவாக நிற்கும் தலத்திருஅவை ஒடுக்கப்படுவது குறித்தும், திருப்பீடச் செயலர் கவலையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிக்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாகப் போராடிவரும் நிகராகுவா தலத்திருஅவையின் கோவில்களும், அதிகாரிகளும், கடந்த சில மாதங்களாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில், நிகராகுவாவின் மனித உரிமை நிறுவனங்களுக்கும், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கும் உதவும் நோக்கில், 15 இலட்சம் டாலர்களை அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2018, 16:21