தேடுதல்

Vatican News
கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

அயர்லாந்து திருப்பயணம், நம்பிக்கையின் மறைப்பணி

உலக குடும்பங்கள் மாநாட்டிற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அயர்லாந்து செல்லவிருப்பதையொட்டி திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் குடும்பங்கள் அன்பைக் கொணரும் முயற்சிகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம், உந்து சக்தியாக அமையும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அயர்லாந்திலும், ஏனைய நாடுகளிலும் அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள், இன்றைய சமுதாயத்தில் குடும்பத்தின் முக்கியத்துவம், திருஅவை வாழ்வில் கிறிஸ்தவக் குடும்பங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை, அயர்லாந்து திருத்தூதுப் பயணத்தில், முதலில் குடும்பத்தின் நற்செய்தி பற்றி மீண்டும் உறுதிப்படுத்துவார் என்று உரைத்தார்.

குடும்பங்களின் நற்செய்தி என்பது, இன்றைய சமுதாயத்திலும், திருஅவையிலும்,  குடும்பத்தின் இன்றியமையாத இடத்தைச் சுட்டிக்காட்டுவதாகும் என்றும், இன்றைய உலகில் அன்பு, விசுவாசம், கல்வி வழங்குதல், பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் ஆகிய குடும்பத்தின் மறைப்பணிக்கு ஆதரவளிப்பதாகும் என்றும், கர்தினால் கூறினார்.

கிறிஸ்தவக் குடும்பங்கள், நற்செய்தியின் மகிழ்வுக்குச் சான்று பகர வேண்டியது முக்கியமானது என்றும் கூறிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், புலம்பெயர்வு, குடும்பப் பிரச்சனைகள், ஒரே பாலினச் சேர்க்கையாளரை ஏற்பது போன்ற விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

22 August 2018, 16:06