தேடுதல்

தென் சூடான் முன்னாள் சிறார் படைவீரர் தென் சூடான் முன்னாள் சிறார் படைவீரர் 

சிறாரைக் காப்பாற்றுவது, வருங்காலத்தில் போர்களைத் தடைசெய்யும்

சிறார் படைவீரரைக் குறைத்தல், பாலியல் அடிமைத்தனம், கடத்தல் மற்றும் ஏனைய வன்முறைக்கு உள்ளாகியிருக்கும் சிறாரை மீட்டல் போன்ற சிறார்க்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பேராயர் அவுசா ஐ.நா.வில் வலியுறுத்தல்

பிரான்சிஸ் கிறிஸ்டோபர் - வத்திக்கான் செய்திகள்

சிறாரும், ஆயுதம் ஏந்திய மோதல்களும் என்ற தலைப்பில், இத்திங்களன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், போர்கள் மற்றும் வன்முறை இடம்பெறும் இடங்களிலிருந்து இன்றையச் சிறாரைக் காப்பாற்றுவது, வருங்காலத்தில் போர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்யும் என்று கூறினார்.

அனைத்துப் போர்கள் மற்றும் ஆயுத மோதல்களில் அதிகம் பாதிக்கப்படுவது சிறார் என்றுரைத்த பேராயர் அவுசா அவர்கள், அனைத்துச் சண்டைகளுக்கும் தீர்வு காண நம்மால் இயலவில்லை எனினும், சண்டைகளின் கடும் விளைவுகளை அனுபவிக்கும் சிறாரை, அவற்றிலிருந்து பாதுகாக்க நம்மால் இன்னும் அதிகம் செய்ய இயலும் என்று கூறினார்.

முன்னாள் சிறார் படைவீரர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறாரின் கல்வி உரிமைக்கு உறுதியளிக்கவும் ஐ.நா.வை வலியுறுத்திய பேராயர் அவுசா அவர்கள், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் அவ்விடங்களில் சிக்கியுள்ள சிறாரின் எதிர்காலத்திற்கு இயன்ற அனைத்தையும் ஆற்றுமாறு, அனைத்துத் துறையினருக்கும் அழைப்பு விடுத்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2018, 15:54