தேடுதல்

இணைந்து செபிப்போம் இணைந்து செபிப்போம் 

நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர முன்வருவோம்

நம் அனைத்து ஏமாற்றங்களையும், மீண்டும் எழும்பிவருவதற்கான வாய்ப்பாக இறைவனின் துணையுடன் மாற்ற முடியும். நாம் நமக்குள்ளேயே முடங்கிவிட வேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இறைவனை நம் அருகில் கொண்டு நம் அனைத்து ஏமாற்றங்களையும் வெற்றிகண்டு, ஒவ்வொரு நொடியையும் நாம் மீண்டும் துவக்குவதற்கான வாய்ப்பாக நோக்கமுடியும் என சனவரி 31, வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் அனைத்து ஏமாற்றங்களையும், மீண்டும் எழும்பிவருவதற்கான வாய்ப்பாக இறைவனின் துணையுடன் மாற்ற முடியும் என அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிக மோசமான நேரங்களிலும் நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடவேண்டாம் என்ற விண்ணப்பதையும் முன்வைத்துள்ளார்.

நாம் நமக்குள்ளேயே முடங்கிவிடாமல், நம் துன்பங்கள் அனைத்தையும் இறைவனிடம் பகிர்ந்து ஒருவருக்கொருவர் அவைகளைத் தாங்கிக்கொள்ள உதவுவோம் என மேலும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 ஜனவரி 2025, 14:50