திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

கல்வி என்பது மனம், இதயம், கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

பிலிப்பைன்ஸ் தலைநகரின் தெல சால் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில், கற்றல், உணர்வுகள் மற்றும் சேவை ஆகியவற்றுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கல்விக்கு அழைப்பு

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

நவம்பர் 8-9 தேதிகளில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள தெல சால் பல்கலைக்கழகத்தில், பணிபுரிய கற்றலின் பல்வேறு அம்சங்களை ஆராய வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து, நான்காவது அகில உலக மாநாடு ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது,

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாநாட்டுக்கு அனுப்பியுள்ளச் செய்தியில், தாளாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைத்து, பணிபுரிய-கற்றல் துறையில் தங்கள் அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் பகிர்ந்து கொள்வதே இம்மாநாட்டின் இலக்காகக் கொண்டுள்ளதை குறிப்பிட்டு,  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கல்விக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனம், இதயம் மற்றும் கைகளின் மொழிகளுக்கு இடையேயான உறவைப் பற்றிய விழிப்புணர்வை இம்மாநாடு இளைஞர்களிடையே ஏற்படுத்தக்கூடும் என்றும்,  இவ்விதத்தில், கல்வியாளர்கள் தங்கள் கவனிப்பில் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களை ஒருங்கிணைந்த அணுகுமுறையில், கல்வி மற்றும் ஆன்மீகத்தை இணக்கமாக சிந்திக்க, கற்றுக்கொள்ள, செயலாக்க மற்றும் அதை இசைவாக செயல்படுத்தவும், கல்வியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

இதனால் நமது உலகளாவிய சமுதாயத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் தலைவர்களாக முடியும் என்பது மட்டுமல்ல, இம்மாநாட்டின் முயற்சிகள், திருத்தூதர்களாக பொது நன்மைக்காகப் பங்குகொள்ளும் அனைவரின் ஆர்வத்தையும் மேம்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இது நற்செய்தியின் உருமாறும் உண்மை, அழகு மற்றும் மகிழ்ச்சியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்  அதேவேளை, சகோதர ஒற்றுமை, நீதி மற்றும் அமைதியின் இறையரசை கட்டியெழுப்பும் என்றும் கூறி, கல்வியில் தொடர்ந்து பணியாற்ற ஊக்குவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2023, 14:43