உலக மீன்பிடித்தினத்தில் நன்றியை வெளியிடும் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருப்போருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் இந்நாளில் செபிப்பதோடு, அவர்களுக்காக நன்றியும் உரைப்போம் என நவம்பர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக மீன்பிடித் தினத்தை சிறப்பிக்கும் நவம்பர் 21ஆம் தேதி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் என தன் டுவிட்டர் செய்தியில் கேட்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைபராமரிப்பில் முழு நம்பிக்கைக் கொண்டு கடலில் தினமும் தங்கள் வலைகளை விரிப்பதோடு, கடல் மீது தங்கள் அக்கறையையும் வெளிக்காட்டிவரும் மீனவர்களுக்கு நம் நன்றியை வெளியிடுவோம் என மேலும் விண்ணப்பித்துள்ளார்.
இதே நவம்பர் 21ஆம் தேதி, ஆழ்நிலைதியான துறவியர் தினம் திருஅவையில் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, இரண்டாவது டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்நிலைதியான பெண்துறவியர் என்பவர்கள், சோர்வின்றி இறைவனைப் புகழும், நன்றிகூறும், மற்றும் அனைத்து மனித குலத்திற்காகவும் இறைவனிடம் விண்ணப்பிக்கும் திருஅவையின் குரல் என்றும், தங்கள் செபத்தின் வழியாக இறைவனின் உடனுழைப்பாளர்களாக செயல்படும் இவர்களுக்கு நன்றியை வெளியிடவும், அவர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்கவும் மறவோம் என மேலும் விண்ணப்பித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்