தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

இரக்கமுள்ள பார்வை, தாழ்ச்சியுள்ள இதயம்

இரக்கம் மற்றும் தாழ்ச்சியின் பாதை வழியாக மரணத்தை வென்ற தனது வாழ்க்கையை நமக்காக இயேசு அளிக்கின்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இரக்கமுள்ள பார்வையையும் தாழ்ச்சியுள்ள இதயத்தையும் இறைவனிடம் கேட்போம் என்றும், இவ்வாறு இறைவனிடம் கேட்பதில் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 4 சனிக்கிழமை புனித சார்லஸ் பொரோமேயுவின் திருவிழாவைத் திருஅவை சிறப்பித்து மகிழும் வேளையில் இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமகன் இயேசு மரணத்தை வென்ற தனது வாழ்வை நமக்காகத் தருகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரக்கமுள்ள பார்வையையும், தாழ்ச்சியுள்ள இதயத்தையும் கடவுளிடம் வேண்டுவோம். இதைக் கேட்பதில் நாம் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம், ஏனென்றால் இரக்கம் மற்றும் தாழ்ச்சியின் பாதை வழியாக மரணத்தை வென்ற தனது வாழ்க்கையை நமக்காக இயேசு அளிக்கின்றார் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2023, 09:35