விண்ணகத்தை நோக்கிச் செல்லும் இறந்தோர்க்கான செபங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களை நினைவுகூர இந்த நவம்பர் மாதம் நமக்கு வலியுறுத்துகின்றது என்றும், அவர்களுக்கான நமது செபங்கள் விண்ணகத்தை நோக்கிச் செல்லும் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 11 சனிக்கிழமை தூர்ஸ் நகர் புனித மார்ட்டீன் நினைவு நாளை திருஅவை சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தின் வழியாக இறந்த நம்பிக்கையாளர்களுக்கு நாம் உறுதுணை அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம்மை விட்டுப் பிரிந்த, இறந்த நம்பிக்கையாளர்களை அதிகமாக நினைவுகூரும் இந்த நவம்பர் மாதத்தில் அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம். விண்ணகத்தை நோக்கிச் செல்லும் நமது செபங்கள் வழியாக அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்து நிலைவாழ்விற்கு அழைத்துச் செல்லும் பிணைப்புக்களையும் ஏற்படுத்துவோம். எனவே அவர்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்று தனது குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்