அன்பே நம் வாழ்வின் மையம், மகிழ்ச்சியின் ஆதாரம்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
நவம்பர் மாதம் 7ஆம் தேதி, செவ்வாய் கிழமையன்று அன்பை வாழ்வின் மையமாக கொண்ட டுவிட்டர் செய்தியை வெளியிட்டள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மகிழ்ச்சியாக இருக்க பணக்காராகவோ, புகழ் பெற்றவராகவோ அல்லது சக்திவாய்ந்தவராகவோ நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நம் இதயத்தின் தாகத்தைத் தீர்க்ககூடியது அன்பு மட்டுமே, அன்பு மட்டும் தான் நம் காயங்களை ஆற்றும், அன்பு ஒன்று தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமென்றும், மேலும், இயேசு நமக்குக் கற்பித்த உன்னத வழி இது தான், நம் முன் அவர் திறந்து வைத்துள்ள பாதையும் இதுதான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
போர்கள் பெருகி வருகின்ற இன்றைய சூழலில் திருத்தந்தையின் இந்த டுவிட்டர் செய்தி பகையினை நீக்கி, ஒற்றுமையில் ஒருங்கிணைய வழிவகுப்பதாகவுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்