மனித நேயத்தை சிதைக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எண்ணற்ற மக்கள், சிறார் மற்றும் அவர்களது குடும்பத்தின் எதிர்கால வாழ்க்கையை அழிக்கும் மற்றும் மனித நேயத்தை சிதைக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், மோதல் மற்றும் போர் அதிகமாவதைத் தடுப்பதற்காக இயன்ற அனைத்தையும் செய்யுங்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், இரஷ்யா என போர் மற்றும் மோதலினால் பாதிக்கப்பட்ட எல்லா மக்களையும் நினைவுகூர்ந்து செபிக்க அழைப்புவிடுத்தார்.
மேலும் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் இத்தாலியில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து துயருறும் மக்களை தன் செபத்தின் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹமாஸால் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு போரினை நிறுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்