தேடுதல்

பிரான்சில் வீடற்றோருக்கான தற்காலிக இடங்கள் பிரான்சில் வீடற்றோருக்கான தற்காலிக இடங்கள்  (AFP or licensors)

ஏழைகளை உற்று நோக்கி உள்மன ஏழ்மையை உணர

மரணதண்டனை என்பது ஒரு நாட்டின் நீதிக்கானது என எடுக்க முடியாது, ஏனெனில், அது குற்ற தடுப்பு நடவடிக்கையாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகவோ இல்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நாம் ஏழைகளை உற்று நோக்கத் துவங்கும்போது, நாமும் உள்மன ஏழ்மையை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைக் கண்டுகொள்வோம் என டுவிட்டர் செய்தி ஒன்றை அக்டோபர் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 10ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக வீடற்றோர் தினம் குறித்து டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நாம் அனைவரும் உள்மன ஏழ்மையை ஒருவர் மற்றவருடன் பகிர்கிறோம் என்பதையும், உலகு சார்ந்த உணர்விலிருந்து நம்மை விடுவிக்க இறைஆவியின் தேவை நமக்கு உள்ளது என்பதையும், தாழ்ச்சியுணர்வே நம் பெருமிதம், மற்றும் உடன்பிறந்த உணர்வே ஒவ்வொரு கிறிஸ்தவரின் உண்மையான சொத்து என்பதையும், நாம் ஏழைகளை உற்றுநோக்கும்போது புரிந்துகொள்வோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்டோபர் 10ஆம் தேதி உலகில் சிறப்பிக்கப்பட்ட மரணதண்டனை  ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாள் குறித்தும் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மரணதண்டனை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் வாழ்விற்கான உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, மரணதண்டனை என்பது ஒரு நாட்டின் நீதிக்கானது என எடுக்க முடியாது, ஏனெனில், அது குற்ற தடுப்பு நடவடிக்கையாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகவோ இல்லை, மாறாக, பழிவாங்கும் உணர்வை அதிகரிப்பதாகவே உள்ளது, என்கிறது திருத்தந்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2023, 15:01