வரவேற்கும் திருஅவையாக நம்மை அழைக்கும் கிறிஸ்து
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிறிஸ்துவின் பார்வையானது நம்மை வரவேற்கும் திருஅவையாக இருக்க அழைக்கின்றது என்றும், கடவுளின் முகம் நம்மில் தெளிவாக வெளிப்பட ஒன்றிணைந்து செபமாலை செபிப்போம் என்றும் இரண்டு குறுஞ்செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 7 சனிக்கிழமை தூய செபமாலை அன்னை திருவிழா மற்றும் 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் வார நிறைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஹஸ்டாக் உலக ஆயர்கள் மாமன்றம் மற்றும் ஹஸ்டாக் தூய செபமாலை அன்னை, ஒன்றிணைந்து செபிப்போம் என்ற தலைப்புக்களில் இரண்டு குறுஞ்செய்திகளை பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹஸ்டாக் உலக ஆயர்கள் மாமன்றம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட முதல் குறுஞ்செய்தியில், துன்பம் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்களை நோக்கிய கிறிஸ்துவின் வரவேற்கும் பார்வையானது, அனைவரையும் மீண்டும் மீண்டும் வரவேற்கும் ஒரு திருஅவையாக இருக்க நம்மை அழைக்கிறது என்றும், சோர்வடைந்தவர்களே, ஒடுக்கப்பட்டவர்களே, வாருங்கள், உங்கள் வழியை இழந்தவர்களே, நம்பிக்கையின் கதவுகள் மூடப்பட்டவர்களே திருஅவை உங்களுக்காக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
தனது இரண்டாவது குறுஞ்செய்தியில், தூய செபமாலை அன்னையின் திருவிழாவை சிறப்பிக்கும் இந்நாளில், இறைவனின் அன்பு முகம் நம்மில் வெளிப்படும்படியாக செபமாலையின் மறைபொருள்களை தியானித்து ஒன்றிணைந்து செபமாலை செபிப்போம் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்