இயேசுகிறிஸ்துவின் மீது நமது பார்வையைத் திருப்ப...
மெரினா ராஜ் - வத்திக்கான்
நமது சாயலாகவும் இலக்காகவும் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் மீது நமது பார்வையைத் திருப்ப அழைக்கிறார் அன்னை மரியா என்றும், இயேசு நமக்குக் காட்டிய வாழ்வின் பாதையில் நடக்க ஊக்கமூட்டுகின்றார் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 21 சனிக்கிழமையன்று ஹாஸ்டாக் செபமாலை மாதம் என்ற தலைப்பில் தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறுஞ்செய்தியினை பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, இரக்கம், செவிசாய்த்தல் பொறுமை, நம்பிக்கையான உரையாடல் ஆகிய பாதைகளில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நமது சாயல் மற்றும் இலக்காக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் மீது நமது பார்வையைத் திருப்ப அன்னை மரியா இந்த செபமாலை மாதத்தில் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். அவரது இந்த ஊக்கமானது இயேசு நமக்குக் காட்டிய முன்மாதிரிகையான அமைதி, இரக்கம், செவிசாய்த்தல், பொறுமை, நம்பிக்கையான உரையாடல் ஆகியவற்றின் பாதையில் நடக்கவும், அதனைப் பின்பற்றவும் நமக்கு ஊக்கமளிக்கின்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி உணர்த்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்