தேடுதல்

இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதல் - ஜெருசலேம் இஸ்ரேல் பாலஸ்தீனிய மோதல் - ஜெருசலேம்  (AFP or licensors)

புனித பூமியின் அமைதிக்காக ஜெபத்தில் ஒன்றிணைவோம்

நவம்பர் 19ஆம் தேதி, உலக வறியோர் நாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் ஏழை எளியோரோடு திருப்பலி நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புனித பூமியின் அமைதிக்காக அத்தலத்திருஅவையுடன் அனைவரும் ஜெபத்திலும் உண்ணாநோன்பிலும் ஒன்றிணைவோம் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, புனித பூமி தலத்திருஅவை, அமைதிக்கான செபம் மற்றும் உண்ணா நோன்பு நாளை கடைபிடிப்பதை முன்னிட்டு அதே நாளில் நாமும் ஒன்றிணைய வேண்டும் என அந்நாளில் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்பு விடுத்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிணையக் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், மோதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க வேண்டும், மனிதாபிமானச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும், அப்பாவி மக்களின் இரத்தம் சிந்தப்படாமலிருக்க வேண்டும் என மேலும் அதில் விண்ணப்பித்துள்ளார்.

மேலும், அக்டோபர் 17ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடம், திருத்தந்தையின் நவம்பர் மாத திருப்பலிக் கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 2ஆம் தேதி அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளையொட்டி, உரோம் நகரின் போர் வீரர்களின் கல்லறையில் காலைத் திருப்பலியை நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 3ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருஅவையில் கடந்த ஓராண்டு காலத்தில் உயிரிழந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், கர்தினால்கள், ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்கான திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 19ஆம் தேதி, உலக வறியோர் நாளையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் ஏழை எளியோரோடு திருப்பலி நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2023, 15:24