தேடுதல்

மெக்சிகோவில் உள்ள குரேரோ மாநிலத்தை தாக்கிய ஓட்டிஸ் சூறாவளி மெக்சிகோவில் உள்ள குரேரோ மாநிலத்தை தாக்கிய ஓட்டிஸ் சூறாவளி  (AFP or licensors)

மெக்சிகோவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் செய்தி

மெக்சிகோவின் குரேரோ மாநிலத்தில் ஓடிஸ் சூறாவளியால் இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது குறித்து திருத்தந்தையின் இரங்கல் தந்தி

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

புதன்கிழமை மெக்சிகோவில் உள்ள குரேரோ மாநிலத்தை தாக்கிய ஓட்டிஸ் சூறாவளியில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் நான்கு பேர் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் மெக்சிகோ அதிகாரிகள்.

ஓட்டிஸ் கொடிய புயலை அடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரங்கல் செய்தியை, அகாபுல்கோவின் பெருநகர பேராயர் லியோபோல்டோ கோன்சாலஸுக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சூறாவளியால் இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக தனது உருக்கமான வேண்டுதல்களையும், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தந்தைக்குரிய அக்கறை மற்றும் ஆன்மீக நெருக்கத்தையும், ஏற்பட்ட சேதங்கள் குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார் அத்தந்திச் செய்தியில் திருத்தந்தை.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்கு பங்களிக்க தீவிர தொண்டு மூலம் குரேரோ மாநிலத்தின் கிறிஸ்தவ சமூகம் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திருத்தந்தை பிரான்சிஸ் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது தந்தியை  நிறைவுச் செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2023, 14:42