ஹங்கேரி நாட்டிற்கு திருத்தந்தையின் அனுதாபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஹங்கேரி நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் LÁSZLÓ SÓLYOM அவர்கள் தன் 81ஆம் வயதில் இறைபதம் சேர்ந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஹங்கேரியின் அரசுத்தலைவர் KATALIN NOVÁK அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இத்தந்திச் செய்தி, ஹங்கேரி அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் திருத்தந்தையின் அனுதாபங்களை வெளியிடுவதுடன், அவரின் இறப்பால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக அவரின் குடும்பத்திற்கும் இறைஆறுதலை வேண்டுவதாகவும் தெரிவிக்கிறது.
2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை ஹங்கேரியின் அரசுத்தலைவராகப் பணியாற்றிய SÓLYOM அவர்கள், அதற்கு முன்னர் 1990 முதல் 98 வரை ஹங்கேரியின் அரசியலைப்பு நீதிமன்றத்தின் தலைவராக, அதாவது தலைமை நீதிபதியாகச் செயலாற்றியுள்ளார்.
சட்டம் பயின்றுள்ள முன்னாள் அரசுத்தலைவர் SÓLYOM அவர்கள், அரசுத்தலைவராகப் பணியாற்றுவதற்கு முன்னர், சட்டக்கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1942ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த இவர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இறைபதம் சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்