ஆயர் மாமன்றப் பணிகள் தூய ஆவிக்கு சமர்ப்பணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
செவிசாய்த்தல், பகிர்தல், தூயஆவியில் சகோதரத்துவ ஒற்றுமை ஆகியவற்றின் திருஅவை நிகழ்வாக, நடந்துகொண்டிருக்கும் ஆயர் மாமன்றத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக செபத்துடன் ஒன்றிணைந்து வருபவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும், இப்பணியை தூய ஆவியானவரிடம் ஒப்படைத்து வாழ அழைப்புவிடுப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 8 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுயில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 7 சனிக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற செபமாலை வழிபாட்டுப் பவனியையும் நினைவுகூர்ந்தார்.
ஆயர் மாமன்ற உறுப்பினர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ஏராளமான இறைமக்கள் ஒன்றாகக் கூடி செபித்த செபமாலை வழிபாடானது மிகுந்த பக்தியுடன் செபிக்கப்பட்டது.
மெழுகுதிரி ஏந்திய இந்த செபமாலை பவனியானது அக்டோபர் மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் 14,21,28 ஆகிய எல்லா சனிக்கிழமைகளிலும் உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது.
16ஆவது ஆயர்மாமன்றம் நல்ல முறையில் நடைபெறவும் தூய ஆவியின் ஆற்றலையும் அன்னை மரியாவின் அருளையும் வேண்டும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருநற்கருணை ஆராதனையும் நடைபெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்