தேடுதல்

காசாவில் பாதிப்புகள் காசாவில் பாதிப்புகள்  (AFP or licensors)

காஸா மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வு

காசாவின் திருதந்தை பிரான்சிஸின் இரண்டு தொலைபேசி அழைப்புகளை விவரிக்கிறார் அப்பகுதியில் பணியாற்றும் அருள்பணி கேப்ரியல் ரொமனெல்லி

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் மக்களின் நிலை என்ன என்பதைக் கண்டறிய திருத்தந்தை பிரான்சிஸிடமிருந்து இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக வத்திக்கான் செய்திக்கு தெரிவித்துள்ளார் காஸா பங்கு தந்தை கேப்ரியல் ரொமனெல்லி.

காஸாவின் நிலைமையை அறியவும், இப்போது தலத்திருஅவையில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு தனது நெருக்கத்தைக் காட்டவும், திருத்தந்தை   இந்த தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதாக தெரிவித்தார் காஸா பங்குத்தந்தை.

காஸா தலத்திருஅவையில் ஏறக்குறைய 150 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அல்லது குண்டுவெடிப்புகளில் இருந்து பாதுகாப்பான இடத்தைத் தேடுகிறார்கள் என்றும், இந்தத் தாக்குதல்கள் காஸாவின் முழுப் பகுதியையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணி ரொமனெல்லி.

கிறிஸ்தவ சமூகத்தினரிடையே இறப்பு அல்லது சேதங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்த துல்லியமான அறிக்கையும் கிட்டவில்லை என்றும், அக்டோபர் 7 அன்று ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக, செவ்வாய்கிழமை வரை 770 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2023, 15:48