தேடுதல்

செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும் செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்  

செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும் போகும் பாதை

மக்களிடையான நேரடித் தொடர்பில் கிட்டும் மன நிறைவு, செயற்கை நுண்ணறிவால் பறிக்கப்படும் ஆபத்து இருப்பதைக் குறித்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வரும் ஆண்டின் உலக சமூகத்தொடர்பு நாளுக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைப்புக் கருத்தை செப்டம்பர் 29, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது திருப்பீடம்.

2024ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படவிருக்கும் உலக சமூகத்தொடர்பு நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ள தலைப்பாக, ‘செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும், முழுமையான மனிதாபிமான தொடர்பாடலுக்காக’ என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறைகள் என்ற பரிணாம வளர்ச்சியானது, இயந்திரங்கள் உதவியுடன், இயந்திரங்கள் வழியாக மனிதர்களோடு தொடர்பு கொள்வது என்பது, மனித எண்ணங்கள் மற்றும் இயந்திரங்கள் வழி உருவாக்கப்படும் எண்ணங்களுக்கும், மனித மற்றும் இயந்திர குரல்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாதபடி வளர்ந்துள்ளது என 58வது உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கானச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து புதிய கண்டுபிடிப்புகள் போல இதுவும் தன்னுள் சவால்களைக் கொண்டுள்ளது எனக் கூறும், சமூகத்தொடர்பு நாளுக்கானச் செய்தி, மக்களிடையான நேரடித் தொடர்பில் கிட்டும் மன நிறைவு, செயற்கை நுண்ணறிவால் பறிக்கப்படும் ஆபத்து இருப்பதைக் குறித்த அச்சத்தையும் வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் மனிதனின் முழுமையான வாழ்வுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் எனவும் இச்செய்தி வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2023, 15:00