இயற்கை எழில் இயற்கை எழில் 

சுற்றுச்சூழல் பாவங்களுக்காக மனம் வருந்துவோம்

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையான பர்த்தலமேயு வலியுறுத்துவது போல சுற்றுச்சூழல் பாவங்களுக்காக மனம் வருந்துவோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

கடவுளின் அருள் உதவியுடன் சுற்றுச்சூழலுக்கு எதிரான நமது பாவங்களுக்காக மனம் வருந்துவோம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 16 சனிக்கிழமை ஹாஸ்டாக் படைப்பின் காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையான பர்த்தலமேயு வலியுறுத்துவது போல சுற்றுச்சூழல் பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடவுளின் அருள் உதவியுடன் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அக்குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பொருள்களை வீணாக்குதலில் கவனம், தேவையற்ற நுகர்வு கலாச்சாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வு கொண்ட வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2023, 11:38