தேடுதல்

லா கார்தே அன்னை மரியா திருத்தலம் லா கார்தே அன்னை மரியா திருத்தலம் 

லா கார்தே அன்னை மரியா திருத்தலம்

Nôtre Dame de la Garde என்னும் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்னை மரியாவின் திருத்தலமானது கம்பீரமான கட்டிடக்கலைச் சிறப்புடன் பியர் புகெட் என்னும் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

புனித ஜீன் மற்றும் நிக்கோலஸ் கோட்டை

நகரின் அடையாளங்களாக பழைய துறைமுகங்களான புனித ஜீன் மற்றும் புனித நிக்கோலஸ் கோட்டைகள் அமைந்துள்ளன. நவீன அருங்காட்சியகம், ஐரோப்பிய மற்றும் மத்திய தரைக்கடல் நாகரிகங்களின் அருங்காட்சியகம் ஆகியவற்றை பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் Rudy Ricciotti வடிவமைத்துள்ளார். அருங்காட்சியகம் புனித ஜீன் கோட்டையிலிருந்து நடைபாதை பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திற்கு மேல் பல மீட்டர்கள் இடையில் அமைந்துள்ளது. அருகிலேயே, புதிய CeReM என்னும் மத்தியதரைக் கடல் மைய அருங்காட்சியகமானது மிலான் நகரக் கட்டிடக் கலைஞரான ஸ்தேபொனோ போரி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. துறைமுகத்தின் எதிர்புறமாக நகரின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இவ்வருங்காட்சியகத்தில் இருந்து நகரின் எழிலையும் லா கார்தே திருத்தலத்தின் அழகையும் ஓர் அற்புதமான காட்சியாகக் காண முடியும்.

லா கார்தே திருத்தலம்

Nôtre Dame de la Garde என்னும் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்னை மரியாவின் திருத்தலமானது கம்பீரமான கட்டிடக்கலைச் சிறப்புடன் பியர் புகெட் என்னும் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. துறைமுகத்தின் தெற்கே, 5 ஆம் நூற்றாண்டில் புனித ஜீன் காசியனால் கட்டப்பட்டு சரசெனியர்களால் அழிக்கப்பட்ட புனித விக்டரின் ரோமன் திருத்தலம்  உள்ளது, இது. மார்செய்லின் பழமையான, மிகவும் வரலாற்று மற்றும் பிரபலமான பகுதியான Quartier du Panier இல், Musée de la Vieille Charité  அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. "லா மேஜர்" என்று அழைக்கப்படும் புனித மரியாவிற்கான திருத்தலமானது நியோ-பைசண்டைன் பாணியில் கட்டப்பட்டுள்ளது. திருத்தலத்திற்கு அருகில்  Rue Sainte மற்றும் Rue Grignan என்னும் அழகான தெருக்கள், நகரின் கிழக்குப் பகுதியில், கார்னிச் அருகே, போரேலி பூங்கா, ஒரு பொதுத் தோட்டம், நீர்நிலை, "பிரெஞ்சு" தோட்டம், தாவரவியல் பூங்கா, பாறை நீர்வீழ்ச்சி ஆகியவவை உள்ளன.

நகரின் முக்கியப் பாதை கனேபியர் எனப்படும் பரந்த பவுல்வர்டு பழைய துறைமுகத்திலிருந்து ரிஃபார்மெஸ் பகுதி வரை கிழக்கு நோக்கி நீண்டுள்ளது. பழைய துறைமுகத்தின் நுழைவாயிலில் இரண்டு பெரிய கோட்டைகள் உள்ளன - தெற்குப் பகுதியில் புனித நிக்கோலஸ் கோட்டை மற்றும் வடக்கே புனித ஜீன் கோட்டை. மர்சேய்ல் கடற்கரையில் இருந்து தொலைவில் நான்கு தீவுகளை உள்ளடக்கிய ஃப்ரியோல் தீவுக்கூட்டம் உள்ளது. அவற்றில் ஒன்று,  அலேக்சாந்திரோ துமாஸ் என்பவரின் Il Conte di Montecristo” என்னும் நாவலால் பிரபலமானது. மத்திய மார்செய்லின் தென்கிழக்கில் ப்ரிஃபெக்சர் மற்றும் ப்ளேஸ் காஸ்டெல்லேனின் நினைவுச்சின்ன நீரூற்று உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2023, 11:04