மர்சேய்ல் நகரின் வரலாறு
மெரினா ராஜ் - வத்திக்கான்
சிறிது கால இடைவெளிக்குப்பின் 1822 அக்டோபர் மாதம் 6 ஆம் நாள் மீண்டும் செயல்படத் துவங்கியது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் உயர் மறைமாவட்டமாகவும், 2002 டிசம்பர் 8ஆம் நாள் பெரு நகர மறைமாவட்டமாகவும் மாறியது. ஏறக்குறைய 10,83,000 பேர் கொண்ட மொத்த மக்கள் தொகையில் 7,38,000 பேர் கத்தோலிக்கர்களாக உள்ளனர். 108 பங்குத்தளங்கள், 4 ஆயர்கள், 126 மறைமாவட்ட குருக்கள், 82 துறவற குருக்கள், என மொத்தமாக 208 அருள்பணியாளர்களைக் கொண்டுள்ளது மர்சேய்ல். 27 நிரந்தர திருத்தொண்டர்கள், 8 குருத்துவ மாணவர்கள், 123 ஆண் துறவறத்தார், 302 பெண் துறவறத்தார், 3 தனியார் நிறுவனங்கள், 167 கல்வி நிறுவனங்கள், 252 மறைக்கல்வியாளர்கள் இங்கு உள்ளனர். 101 தொடக்கப்பள்ளிகளில் 13,160 மாணவர்களும், 65 நடுநிலைப்பள்ளிகளில், 23,749 நடுநிலைப்பள்ளி மாணவர்களும் உள்ளனர்.
Marseilles என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் மர்சேய்ல், Bouches-du-Rhône என்னும் பிரெஞ்சுப்பகுதியில் Alpes-Côte d'Azur பகுதியின் தலைநகரில் அமைந்துள்ளது. தெற்கு பிரான்சின் ப்ரோவென்ஸ் பகுதியில் அமைந்துள்ள மத்தியதரைக் கடலின் ஒரு பகுதியான லயா வளைகுடாவின் கடற்கரையில், ரோன் ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு வாழ்கின்ற மக்கள் மர்சேய்லியர்கள் என (Marseillais) என்று அழைக்கப்படுகிறார்கள். 650 சதுர கிமீ பரப்பளவில் 10,83,000 மக்களைக்கொண்ட மர்சேய்ல் பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாகவும், பாரீஸ் மற்றும் லியோனுக்கு அடுத்தபடியாக பிரான்சின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் திகழ்கின்றது. Aix-en-Provence நகரங்கள் மற்றும் 90 புறநகர் நகராட்சிகளைக் கொண்டுள்ளது மர்சேய்ல்.
மர்சேய்ல் நகரின் வரலாறு
கி.மு., 600 ஆம் ஆண்டு ஃபோசியாவிலிருந்து குடியேறிய கிரேக்கர்களால் கண்டறியப்பட்ட நகரமான மர்சேய்ல், பிரான்சின் பழமையான நகரமாகவும், ஐரோப்பாவின் மிகப் பழமையான தொடர்ச்சியான குடியேற்றங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. பண்டைய கிரேக்கர்கள் இதனை மசாலியா என்றும் ரோமானியர்கள் மஸ்ஸிலியா என்றும் அழைத்தனர். மசாலியா என்ற பெயர் மாசா அதாவது பெரிய கட்டி, பார்லி-கேக் என்பதிலிருந்து வந்ததாகக் கூறுவர். "கட்டி" என்பது லா கார்தே என்னும் பாறையைக் குறிக்கின்றது. பழங்காலத்திலிருந்தே வர்த்தக துறைமுகமாக இருந்து வரும் மர்சேய்ல் குறிப்பாக காலனித்துவ காலத்தில் ஏற்றுமதி வணிகத்தை செய்து வந்தது. இதனால் 19 ஆம் நூற்றாண்டின் போது, ஒரு வளமான தொழில்துறை நகரமாக மற்றும் வர்த்தக நகரமாக மாறியது. பழைய துறைமுகம் இன்னும் நகரின் மையத்தில் உள்ளது. அங்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு மர்சேய்ல் சோப்பு உற்பத்தி தொடங்கியது. துறைமுகத்தின் அருகில் நோட்ரே-டேம்-தி-லா-கார்தே திருத்தலமான உரோமன்-பைசண்டைன் ஆலயம் அமைந்துள்ளது. இது நகரத்தின் சின்னமாக மர்சேய்ல் மக்களுக்கான ஆலயமாக விளங்குகின்றது. கிராண்ட் போர்ட் மேரிடைம் தி மர்சேய்ல் என்னும் கடல்துறைமுகம் (ஜிபிஎம்எம்) மற்றும் கடல்சார் பொருளாதாரம் ஆகியவை மாநில மற்றும் தேசிய நடவடிக்கைகளின் முக்கிய துருவங்களாக இருக்கின்றன. மர்சேய்ல் முதல் பிரெஞ்சு துறைமுகமாகவும், இரண்டாவது மத்தியதரைக் கடல் துறைமுகமாகவும், ஐந்தாவது ஐரோப்பிய துறைமுகமாகவும் உள்ளது. ஐரோப்பாவில், லண்டன் மற்றும் பாரிஸுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய யூத சமூகத்தை கொண்டுள்ளதாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.
பொருளாதார மேம்பாடு, மற்றும் திட்டங்கள்
1990 களில், பொருளாதார மேம்பாடு மற்றும் நகர்ப்புற புதுப்பிப்புக்கான Euroméditerranée திட்டம் தொடங்கப்பட்டது. 2000 மற்றும் 2010 களில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் புனரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. டிராம் போக்குவரத்து, தங்கும் விடுதியான ஹோட்டல்-டியூவை சொகுசு விடுதியாகப் புதுப்பித்தல், வெலோட்ரோம் விளையாட்டரங்கம், சிஎம்ஏ, சிஜிஎம் வானுயர்ந்த கோபுரம், பிற ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் நாகரிகங்களின் அருங்காட்சியகங்களின் விரிவாக்கம் போன்றவை இப்பகுதியினை மேலும் பிரபலமாக்கின. இதன் விளைவாக பிரான்சில், பாரிஸுக்கு அடுத்த படியாக அதிக அருங்காட்சியகங்கள் மர்சேய்லில் உள்ளன. இந்த நகரம் 2013 இல் ஐரோப்பிய கலாச்சார தலைநகராகவும், 2017 இல் ஐரோப்பிய விளையாட்டு தலைநகராகவும் பெயரிடப்பட்டது. ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கான மன்றத்தின் தாயகமாக மர்சேய்ல் திகழ்கின்றது. பிரான்சில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக புகழ் பெற்ற மன்றங்களில் இதுவும் ஒன்றாகும். மர்சேயில், 1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி, 2016ல் ஐரோப்பா கண்டத்திற்கு இடையிலான போட்டி போன்றவற்றை நடத்தியுள்ளது. மேலும் பல உயர் கல்வி நிறுவனங்களின் தாயகமாகத்திகழும் மார்சேய்ல், Aix-Marseille பல்கலைக்கழகத்தையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்