தேடுதல்

திருத்தந்தையின் மங்கோலிய திருத்தூதுப் பயண நிறைவுநாள் நிகழ்வுகள்

நான்கு நாள்கள் கொண்ட மங்கோலியாவுக்கான திருத்தூதுப் பயணமானது செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 4 திங்கள் கிழமையுடன் முடிவடைந்தது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எங்கெல்லாம் நல்லிணக்கம் இருக்கின்றதோ அங்கே நாம் புரிதலை, வளமையை, அழகைக் காண்கின்றோம் என்ற வரிகளின் வழியாக பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் சமயத்தலைவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரைப் பற்றி நமக்குள்ளிருக்கும் தாகம், அந்த தாகத்தைத் தணிக்கும் அன்பு என்பவை பற்றி மங்கோலிய மக்களுக்கு திருப்பலி மறையுரை வாயிலாக எடுத்துரைத்து தனது மூன்றாம் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார்.

செப்டம்பர் 4 திங்கள் கிழமை மங்கோலியா திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாளான இன்று உலான்பாதர் உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு இந்திய இலங்கை நேரம் காலை 4,30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் அவருடன் பணியாற்றும் அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார். உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலுருந்து புறப்பட்ட திருத்தந்தைபிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 7.9 கிமீ தூரம் காரில் பயணித்து காசா தெல்லா மிசரிகோர்தியா என்னும் கருணை இல்லத்தை வந்தடைந்தார். அங்கு அவர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு நாள்கள் கொண்ட மங்கோலியாவுக்கான திருத்தூதுப் பயணமானது செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 4 திங்கள் கிழமையுடன் முடிவடைந்தது. இந்த 43ஆவது திருத்தூதுப் பயணத்தில் தலைநகர் உலான்பாதரில் உள்ள நாட்டின் அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான உரை, புனித பேதுரு பவுல் பேராலயத்தில் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தார்க்கான உரை, பல்சம்ய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் மதத் தலைவர்களுக்கான உரை  பனி மாளிகை எனபப்டும் விளையாட்டரங்கத்தில் மங்கோலிய மக்களுக்கான திருப்பலி மறையுரை, கருணை இல்லத்திதிறப்பு விழாவில் தொண்டுப்பணிகள் ஆற்றுவோர்க்கான உரை என 5 உரைகளை ஆற்றியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 43ஆவது திருத்தூதுப்பயண நிகழ்வுகள் நிறைவிற்கு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2023, 10:48